முகப்பு அரசியல் திமுக கூட்டணிக் கட்சிகளும், போட்டியிடும் தொகுதிகளும்

திமுக கூட்டணிக் கட்சிகளும், போட்டியிடும் தொகுதிகளும்

திமுக மொத்தமாக தொகுதிகளில் போட்டியிடுகிறது

by Tindivanam News

இந்தியாவில் 18வது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19’ம் தேதி துவங்கி, நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவித்து கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அந்த வகையில், தமிழ் நாட்டில் மூன்று பெரிய கூட்டணி அமைந்துள்ளது, அவை திமுக கூட்டணிக் கட்சிகள், அதிமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் பாஜக கூட்டணிக் கட்சிகள்.

இதில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி முடித்து தொகுதிகள் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி,

திமுக கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
1. வட சென்னை
2. தென் சென்னை
3. மத்திய சென்னை
4. ஸ்ரீபெரும்புதூர்
5. காஞ்சிபுரம் (தனி)
6. அரக்கோணம்
7. வேலூர்
8. தர்மபுரி
9. திருவண்ணாமலை
10. ஆரணி
11. கள்ளக்குறிச்சி
12. சேலம்
13. ஈரோடு
14. நீலகிரி (தனி)
15. கோவை
16. பொள்ளாச்சி
17. பெரம்பலூர்
18. தஞ்சாவூர்
19. தேனி
20. தூத்துக்குடி
21. தென்காசி (தனி)

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
22. திருவள்ளூர் (தனி)
23. கடலூர்
24. மயிலாடுதுறை
25. சிவகங்கை
26. திருநெல்வேலி
27. கிருஷ்ணகிரி
28. கரூர்
29. விருதுநகர்
30. கன்னியாகுமரி
31. புதுச்சேரி

  எடப்பாடி'க்கு BYE - BYE, பாஜகவுடன் கூட்டணி அமைத்த பாமக

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
32. விழுப்புரம் (தனி)
33. சிதம்பரம் (தனி)

இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
34. நாகப்பட்டினம் (தனி)
35. திருப்பூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
36. மதுரை
37. திண்டுக்கல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதி:
38. ராமநாதபுரம்

ம.தி.மு.க. கட்சி போட்டியிடும் தொகுதி:
39. திருச்சி

கொங்கு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி:
40. நாமக்கல் (தி.மு.க. சின்னம்)

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 என்ற இலக்குடன் ஆளும் திமுக கட்சி களமிறங்கியுள்ளது. இந்த கூட்டணி வெற்றிக்கூட்டணியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole