முகப்பு அரசியல் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை – 2024 | 36 முக்கிய அறிவிப்புகள்

பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை – 2024 | 36 முக்கிய அறிவிப்புகள்

முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

by Tindivanam News

18வது மக்களவைத் தேர்தளுக்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடந்து வருகிறது. அனைத்து கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் 36 முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:-

  1. உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
  2. புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.
  3. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
  4. புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
  5. குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
  6. இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  7. ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
  8. மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்
  9. ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்
  10. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்
  11. மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்
  12. இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்
  13. காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்
  14. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்
  15. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
  16. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
  17. மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்
  18. மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கடன் 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்
  19. 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்
  20. தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்
  21. பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்
  22. நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்.
  திமுக முப்பெரும் விழா - முதல்வர் ஸ்டாலின் உருக்கமுடன் பேச்சு

பாராளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று இந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole