பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், இதுவரை 4 கட்டங்கள் முடிவு பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உத்தரப்பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தாக்கல் செய்திருந்த வேட்புமனு மற்றும் பிராமண பத்திரத்தில் இடம்பெற்றிருந்த பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு மற்றும் கல்வித்தகுதிகள் ஆகியவை மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சொத்து விவரங்கள் :
மொத்த சொத்து மதிப்பு : ரூ.3.02 கோடி.
நிரந்தர வைப்புத்தொகை : ரூ.2.86 கோடி
கையிலிருக்கும் ரொக்கம் : ரூ.52.920.
வங்கிக் கணக்குகளில் : ரூ.80.304
தேசிய சேமிப்பு சான்றிதழில் முதலீடு : ரூ.9.12 லட்சம்
நான்கு தங்க மோதிரங்கள் மதிப்பு : ரூ.2.68 லட்சம்
கடந்த 2018-19’ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது ரூ.11.14 லட்சமாக இருந்த பிரதமரின் வருமானம், தற்போது 2022-23-ல் ஆண்டில் ரூ.23.56 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வித்தகுதி :
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளதுபடி, டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978-ம் ஆண்டு இளங்கலை பட்டமும், 1983-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது எந்தக் குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தற்போது மூன்றாவது முறையாக பாராளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.