முகப்பு அரசியல் வாய் வித்தை வேண்டாம், செயலில் காமியுங்கள் – நடிகர் விஜய் அறிவுரை

வாய் வித்தை வேண்டாம், செயலில் காமியுங்கள் – நடிகர் விஜய் அறிவுரை

தவெக தொண்டர்களுக்கு கட்சி தலைவர் விஜய் கடிதம்.

by Tindivanam News

அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று; நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி” என தவெக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல்; ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று; நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி

மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. மாநாட்டில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் பங்கேற்க ஆர்வமாக இருப்பர் என்பது தனக்கு தெரியும்; அவர்களை காண நானும் ஆவலாக தான் இருக்கிறேன். ஆனால் அனைத்தையும் விட எனக்கு அவர்கள் உடல்நலமே மிக மிக முக்கியம்; மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வரவேண்டாம் என அவர்கள் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

  கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole