தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து பெற்றார்.
தனது பிறந்தநாளையொட்டி அமைச்சர் உதயநிதி, தனது தந்தையும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். இன்று தனது 46வது பிறந்தநாளை உதயநிதி ஸ்டாலின் கொண்டாடும் நிலையில், அவருக்கு முத்தமிட்டு பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதிக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின், அயராது உழைக்கவும் அன்பின் வழி நடக்கவும் எந்நாளும் வழிநடத்தும் தாய், தந்தையரின் வாழ்த்தை பெற்ற மகிழ்வான தருணத்திலிருந்து இந்த நாளை தொடங்குவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
புகைப்படங்கள் :






