சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தின் சில பகுதிகளில், மாநிலத்தில் ஆளும் திமுக கட்சியை சேர்ந்த பலர் மக்களுக்கு வடை சுட்டுக்கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் பாஜக அரசு மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி விட்டனர். கருப்பு பணம் மீட்பு, பொதுமக்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்துதல், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுதல், எல்லோருக்கும் சொந்த வீடு தருதல், 5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைதல், ஊழல் ஒழிப்பு என மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இதெல்லாம் மோடி சுட்ட வடைகள் என மக்களுக்கு வடைகள் கொடுத்து போராட்டம் நடத்தினர்.
அதற்கு போட்டியாக தற்போது. பாஜக கட்சியினரும் வாழைப்பழம் வழங்கும் நூதன போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கோவை மாநகர், சிவானந்தா காலனியில் திரண்ட பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கையில் வாழைப்பழத்துடன் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு எந்த வாக்குறுதியையும் சரியாக நிறைவேற்றாமல் மக்களுக்கு வாழைப்பழம் கொடுத்துவிட்டனர் அவர்கள் நூதனமாக மக்களுக்கு வாழைப்பழங்களை கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
ஆகமொத்தத்தில், மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் அரசுகள் மக்களுக்கு வடையும் வாழைப்பழமும்தான் கொடுக்கின்றனர், மற்றபடி எதுவும் செய்யவில்லை என்ன நகைச்சுவையாக கூட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்த நபர் தெரிவித்து சென்றார்.
இது பற்றி உங்கள் கருத்து என்ன ? கமெண்டில் சொல்லுங்க…