தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கபட்டுவிட்டன. வரும் ஏப்ரல் மதம் 19’ம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 6’ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் இணைந்து தேர்தலை சந்தித்த பாஜக, அதிமுக கட்சிகள் இந்த முறை கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் மற்ற கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்க இரண்டு கட்சிகளும் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிகள் யாருடன் கூட்டணி வைப்பார்கள், எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என தேர்தல் நாள் அறிவித்த நிலையிலும் இழுபறியில் உள்ளது. எனினும் தற்போது, பாமக யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
பாமக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. வடிவேல் இராவணன் செய்தியாளர்களை சந்தித்து கூட்டணிக் கேள்விக்கான பதிலை தெளிவு செய்தார். அவர் கூறியதாவது, “மக்களவைத் தேர்தலை பாஜகவுடன் இணைந்து பா.ம.க சந்திக்கிறது. மேலும், நாளை ஒப்பந்தம் ஆன பிறகு தொகுதிகள் குறித்து அறிவிப்போம். வேட்பாளர்கள் பட்டியல் குறித்து எங்கள் தலைவர் ராமதாஸ் ஐயா அவர்கள், நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிப்பார்” இவ்வாறு கூறினார்.
இந்நிலையில் தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் தெரிந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். உங்களுக்கு தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்க !