தமிழக விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 27ஆம் தேதியை திமுகவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவினரும், அமைச்சர் உதயநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில், நவம்பர் 27ஆம் தேதி பிறந்த எட்டு ஆண் மற்றும் மூன்று பெண் குழந்தைகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தையும், தேவையான உபகரணங்களையும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்வினை விழுப்புரம் விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட அமைப்பாளரும் திண்டிவனம் நகர்மன்ற உறுப்பினருமான சந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். அப்பொழுது அன்று பிறந்த ஒரு குழந்தைக்கு தம்பதிகள் இருவர் பெயர் வைக்க கேட்டுக் கொண்டதால் மாமன்னன் உதயநிதி ஸ்டாலின் என அந்த குழந்தைக்கு அமைச்சர் பெயர் சூட்டினார். இந்த நிகழ்வில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் திமுக கட்சியினர் என பலரும் கலந்து கொண்டனர்.
காணொளி: