உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதையொட்டி, திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க.,சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், 25வது வார்டு கவுன்சிலர் ரேகா நந்தகுமார், முன்னிலையில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னாள் எம்.எல். ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் உதயகுமார். நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன், நகர பொருளாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் அசோகன், கவுன்சிலர்கள் பார்த்திபன், சுதாகர், சதீஷ், பிர்லாசெல்வம், பரணிதரன், ரம்யாராஜா, சரவணன், குணேசேகரன், லதா சாரங்கபாணி.
மாவட்ட பிரதிநிதி முருகன், மீனவரணி ராஜேஷ், நிர்வாகிகள் ஷாகுல்அமீது, சந்தானம், குமார், நத்தர் பாஷா, காமராஜ், பிரதீப்குமார், மோகன், சவுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் திண்டிவனம் முன்னாள் நகர செயலாளர் கபிலன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் : தினமலர்