நாடு முழுவதும் 5 மாநில தேர்தல் சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றால் ராமர் கோயிலை இலவசமாக தரிசனம் செய்யலாம் என்ற வாக்குறுதி அளித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த உத்தவ் அணியைச் சேர்ந்த சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், “மத்திய பிரதேசத்தில் அமித்ஷா அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நான் கேள்விப்பட்டேன். மத்திய பிரதேச மக்கள் பாஜகவை வெற்றி பெறச் செய்தால் இலவசமாக ராமர் கோயிலை தரிசனம் செய்யலாம் எனக் கூறிய அமித்ஷா, ஒருவேளை தோல்வியுற்றால் ராமர் கோவிலில் மத்திய பிரதேச மக்களை தரிசனம் செய்ய விட மாட்டாரா? மேலும் நம் நாட்டில் என்ன மாதிரியான அரசியல் நடக்கிறது என்பது கவலையாக உள்ளது இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.”