நாமக்கல்லில் உள்ள குறிஞ்சி மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் கண்காட்சி வரும் நவம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக சந்திராயன் புகழ் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பங்குகொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அறிவியல் துறைச் சார்ந்த சிறப்பு வல்லுனர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். பள்ளி மாணவர் மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக மாவட்டம் மற்றும் மாநில அளவில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த கண்காட்சிகளில் மாணவர், மாணவிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி தங்களது புதுமையான சிந்தனைகளை மற்றவரிடம் விவரிக்கின்றனர். சிறப்பான கண்டுபிடிப்புகளுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.