பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரைய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் தென்னிந்திய அறிவியல் நாடக விழா-2023 வரும் நவம்பர் 23, 24’ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழக மாணவர்களை பங்கு பெற செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை செய்து வருகின்றது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி கூறியதாவது, “தென்னிந்திய அறிவியல் நாடக விழா-2023 போட்டிக்கு தகுதியான தமிழக மாணவர்களை அனுப்புவதற்கு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாவட்ட அளவிலான அறிவியல் நாடகப் போட்டிகள் அக்டோபரில் நடந்தது. தொடர்ந்து மாவட்ட அளவில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்கள் மாநில அளவினான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
அரசின் வழிகாட்டுதலின்படி எந்தவித இடரும் இல்லாமல் அறிவியல் நாடகப் போட்டிகளை நவம்பர் 16’ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.” இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.