விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிறப்புவாய்ந்த வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் மக்களுக்கு அருள்பாலிக்கிறார். கார்த்திகை மாதங்களில் இந்த கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் கார்த்திகை தீப சங்காபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதனை ஒட்டி கணபதி யாகும், இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா தன்வந்திரி யாகம் நடைபெற்றது. பின்னர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்கரித்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த பூசை மற்றும் வேள்விகளை வேப்பூர் தங்கதுரை தலைமையில் பாபு ஐயர் செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை கிராமப் பொதுமக்களுடன் விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ், பொருளாளர் கருணாகரன், ஜோதிடர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிருந்து செய்திருந்தனர். இதில் கொட்டியாம்பூண்டி கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புற பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.