திண்டிவனம் அருகில் மயிலத்தில் பிரசித்திப் முருகன் திருக்கோயில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமியாக மக்களுக்கு அருள்பாலிக்கின்றார். சமீபத்தில்தான், மயிலம் முருகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில், வருடந்தோறும் இந்த கோயிலில் பங்குனி மாதம் உத்திரத்தில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதனையொட்டி, கடந்த மாதம் 14ம் தேதி, பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
தேரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலயசுவாமிகள் வடம்பிடித்து துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விநாயகர் தேரைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமித் தேர் சென்றது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.
முன்னதாக நேற்று 8ம் நாள் நிகழ்வாக திருக்கல்யாணமும், வெள்ளிக் குதிரை வாகன உற்சவமும் நடைபெற்றது. இன்று இரவு முத்து விமான உற்சவமும், வரும் 24ம் தேதி பங்குனி உத்திரம், தீர்த்தவாரி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது.தொடர்ந்து, 25ம் தேதி முத்துப்பல்லக்கு உற்சவம், இறுதியாக 26ம் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் பங்குனி உத்திர பெருவிழா முடிவடைகிறது.
மயிலம் தேர் புகைப்படங்கள் :-