உலகளவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசித்தம். இங்கு கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் 22 லட்சத்து 42 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருநாமம் இட ரூ. 10 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது. ஒரு சிலர் பக்தர்களை அடாவடியாக வழிமறித்து நெற்றியில் திருநாமமிட்டு அதிக அளவில் பணத்தை வசூல் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனை தவிர்க்க, திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாட்டில் திருப்பதி கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இட ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி மலையில் உள்ள ஏடிசி பகுதியில் இந்த திட்டத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் தொடங்கி வைத்தார். ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக நெற்றியில் திருநாமம் செலுத்தி வருகின்றனர். இதனால் இனிமேல் ரூ.10 கட்டணம் செலுத்தி திருநாமமிட வேண்டியது இல்லை.
இந்த செய்தியால் திருப்பதி செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.