தைப்பூசம் என்றால் முருகனுக்கு சிறப்பு, சிவராத்திரி என்றால் சிவனுக்கு சிறப்பு, ஏகாதசி என்றால் பெருமாளுக்கு சிறப்பு, சதுர்த்தி என்றால் விநாயகருக்கு சிறப்பு, நவராத்ரி என்றால் அம்மனுக்கு சிறப்பு, ஆனால் மாசி மகம் என்றால் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பான நாள். ஆம், மாசி மகத்தன்று புனித நீராடி தெய்வத்தை வணங்கினால், நினைத்தது நடக்கும் மனம் மகிழ்வு பெரும் என்பது ஐதீகம்.
மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாளில் மாசி மகம் கொண்டாடப்படும். அன்று இந்துக்கள் புனித நீராடி கடலாடும் விழா கொண்டாடுவார்கள்.
திண்டிவனம் அருகில் அமைந்துள்ள பெருமுக்கல் மலையில் ஆண்டுதோறும் மாசிமகம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்தியாஜலஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பக்கதர்களுக்கு ஆசி வழங்குவார். மேலும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சாமி சிலைகள் கொண்டுவரப்பட்டு மலையில் நீராடி ஆராதனை செய்யப்படும்.

இந்த வருடமும் பெருமுக்கல் மலையில் மாசிமகம் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் :























