திருவண்ணாமலையில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று மாலை திண்டிவனம் வழியாகப் பயணித்தார். மாலை 6.30 மணியளவில் திண்டிவனம் வந்த அவருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சலவாதி கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு, திண்டிவனம் புரோகிதர் சங்கத் தலைவர் சீனுவாச ஐயர் தலைமை தாங்கினார். இதில் ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளியில் செயல்படும் திரிவேணி பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு காஞ்சி மடாதிபதியை வரவேற்றனர்.