முகப்பு ஆன்மிகம் திண்டிவனம் பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாணம்

திண்டிவனம் பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாணம்

புதுச்சேரியில் திருக்கல்யாண உற்சவ ஏற்பாடு

by Tindivanam News

திண்டிவனம் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாணம் உற்சவம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மாசி மாதம் புதுச்சேரியில் நடக்கும் மாசிமக தீர்த்தவாரி மிகவும் பிரசித்தம். இந்த வருடம் மாசி மக தீர்த்தவாரிக்காக திண்டிவனம் நல்லியன்கோடன் நகரில் அமைந்துள்ள அலமேலு மங்கா சமேத ஸ்ரீநி வாச பெருமாள் புதுச்சேரிக்கு சென்று அருள்பாலிக்கிறார். இதனையொட்டி 23ஆம் தேதி அன்று புதுச்சேரிக்கு ஸ்ரீநிவாச பெருமாள் செல்கின்றார். புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள சிருங்கேரி மடம் சாரதாம்பாள் திருக்கோவிலில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்பு, திருமஞ்சனம். சிறப்பு அலங்காரத்துடன் அம்பலத்தாடியார் மடத்து வீதியில் உள்ள வடமுகத்து செட்டியார் திருமண மண்டபத்தை ஸ்ரீநிவாச பெருமாள் வந்தடைகிறார். தொடர்ந்து நாளை காலையில் வைத்திக்குப்பம் கடல் தீர்த்தவாரிக்கு சுவாமி எழுந்தருள உள்ளார். மேலும், இரவு ஏழு மணிக்கு திருமண மண்டபத்தில் சிறப்பு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகின்றது. மேலும் திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருனார் ஜூயர் மடாதிபதி 26 ஆம் பட்டம் ஜுயர் சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீநிவாச பெருமாளின் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. விழாவில் அனைவரும் பங்கு பெற்று ஸ்ரீநிவாச பெருமாளின் அருள் பெறுமாறு அலமேலு மங்கா சமேத ஸ்ரீநிவாச பெருமாள் மாசிமகக் கடல் தீர்த்தவாரி கமிட்டியின் தலைவர் பொன்னுரங்கம் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  இனி திருப்பதியில் காசு கொடுக்க வேண்டாம், இலவசமாக திருநாமம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole