திண்டிவனம் ராஜாங்குளம் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலில், அன்னதான விழா நடைபெற்றது. திண்டிவனம் ராஜாங்குளம் தென்கரையில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலில், கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல் 12:00 மணியளவில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.