சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது. இந்தத் தொடரில் தொடக்க வீரரும் இந்திய அணி தலைவருமான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் தற்போது இந்த ஆண்டு மத்தியில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 ஓவர் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு இருவரும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்தனர். இருப்பினும் முன்னாள் வீரர்கள் சிலர் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆட வேண்டுமென கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஒன்பதாவது ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. அதே நேரத்தில் தற்போது இளம் வீரர்களைக் கொண்டு உருவாகியுள்ள டி20 அணியும் சிறப்பாக விளையாடி வருவதால், தேர்வு குழு குழப்பத்தில் உள்ளது. இதனால் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் டி20 ஓவர் உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. மேலும் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பையில் நாங்கள் விளையாட விருப்பமாக உள்ளதாக விராட் கோலியும் ரோகித் சர்வாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பிசிசிஐக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருடன் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரும் இணைந்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.