வரும் 2026ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், கிரிக்கெட் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கப்பட்டதால், விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வரும் 2026ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி, ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில், 10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், கிரிக்கெட், டெபிள் டேன்னிஸ், ஸ்குவாஷ், பாட்மின்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது. இந்தியா அதிகம் பதக்கம் பெறும், விளையாட்டு நீக்கத்தால், விளையாட்டு ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.