இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் டாடா ஐபிஎல் (IPL) டி20 கிரிக்கெட் தொடரின் 17வைத்து சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று பிசிசிஐ’ஆல் வெளியிடப்பட்டுள்ளது . இந்த அட்டவணையில் முதல் 21 போட்டிகளுக்கான தேதிகள் மட்டும் மைதானங்கள் விவரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மற்ற போட்டிகளின் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் சென்னையில் மோதுகின்றன. இந்த ஐபிஎல் தொடர் டோனியின் கடைசித் தொடராக இருக்கும் என்பதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அட்டவணை கீழ்வருமாறு: