முகப்பு விளையாட்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்

போட்டிகளில் பங்கேற்பது எப்படி?

by Tindivanam News
khelo india games 2024 held in tamil nadu

2018 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த வருடங்களில் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 21 வயதுக்கு உட்பட்டோர் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பெருந்தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு கேலோ போட்டிகள் நடத்தப்படவில்லை. பின்பு 2021 ஆம் ஆண்டு 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் அரியானா மாநிலம் பஞ்சகுலாவிலும், 2022ஆம் ஆண்டில் மத்திய பிரதேச மாநிலம் போபாலிலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில் 2023’ஆம் ஆண்டிற்கான கேலோ இளைஞர்கள் விளையாட்டுப் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா விளையாட்டு தேர்வு போட்டிகளில் போட்டி விவரங்கள் மற்றும் தேதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி மாதம் 19ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிகளுக்கான விதிமுறைகளும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது அதன்படி விதிமுறைகள் கீழ்வருமாறு,

விதிமுறைகள்: 

  1. பங்கு பெறும் வீரர் / வீராங்கணைகள் 01.01.2005 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும். 
  2. பங்கு பெறும் வீரர் / வீராங்கணைகள் கீழ்க்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் இரண்டு சான்றிதழ்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
    • ஆதார் அடையாள அட்டை (அல்லது) பாஸ்போர்ட், 
    • பிறப்பு சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 01.01.2023 அன்றோ அல்லது அதற்கு முன் நகராட்சி / கிராம பஞ்சாயத்துக்கள் மூலம் வழங்கப்பட்டது), 
    • பள்ளி சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ் 
  3. பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படாது.
  மல்யுத்தம் சம்மேலன இடை நீக்க உத்தரவை ஏற்கவில்லை

மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சூடு யோகாசனம் குத்துச்சண்டை துப்பாக்கிச் சூடுதல் மல்லர் கம்பம் போன்ற விளையாட்டுகள் எங்கு எப்போது நடைபெறும் என்ற விவரங்களையும் நிபந்தனங்களையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole