உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், உலக கிரிக்கெட்டில் பிரபலமான வீரருமான ரோகித் சர்மா பாட புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். பாட புத்தகத்தில் அவரைப் பற்றிய குறிப்பு இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடந்து வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
