மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப் போட்டி ஆண்டுதோறும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். இந்த ஆண்டும் வரும் டிசம்பரில் தாய்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப்போட்டி-2023 நடக்க உள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 24 மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அவர்களை சந்தித்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ரூபாய் 38.40 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும், இது தொடர்பாக X தளத்தில் அவர் பதிவிட்ட பதிவு கீழ் வருமாறு, “தமிழ்நாட்டை விளையாட்டு துறையின் தலைநகராக்கும் நோக்கோடு திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தாய்லாந்தில் வரும் டிசம்பரில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள தமிழ்நாட்டின் 24 வீரர் வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூபாய் 38.40 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியிலிருந்து இன்று வழங்கினோம். மேலும் நம் விளையாட்டு வீரர் வீராங்கனையர் சாதிப்பதற்கு எந்த தடையும் இல்லாமல் வெற்றிகளை குவிக்க கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று தெரிவித்திருந்தார்.”
மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப் போட்டி-2023
தமிழகத்திலிருந்து 24 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு
538
முந்தைய செய்தி