சமீப காலமாக இந்திய மல்யுத்தம் சம்மேளன அலுவலர்கள் மற்றும் மல்யுத்த வீரர்களுக்கும் இடையில் எதிர்ப்பு மனநிலை இருந்து வருகிறது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிச் பூஷன் சிங் சரண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பிரிச் பூஷன் சிங்குக்கு எதிராக மல்லித்த வீர வீராங்கனைகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. பின்பு நடந்த தேர்தலிலும் பிரிச் பூர்ஷனின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கும் மல்யுத்த வீரர்களிடையே எதிர்ப்பு எழுந்தது.
பின்பு இதில் தலையிட்ட மத்திய விளையாட்டு அமைச்சகம் தகுந்த நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெறவில்லை என கூறி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சமமேளனத்தை இடை நீக்கம் செய்து மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்தது. இது தொடர்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சஞ்சய் சிங் திங்கட்கிழமை கூறியதாவது,”ஜனநாயக முறையில் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்று நடைபெற்ற தேர்தலை மற்றும் வழங்கிய ஆவணத்தை அரசு எவ்வாறு நிராகரிக்க முடியும் சம்மேளனத்தை இடைநீக்கம் செய்த உத்தரவை நாங்கள் ஏற்கவில்லை. அதனை நிர்வகிக்க புதிதாக அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை. இந்திய சம்மேளன பணிகளை நாங்களே மேற்கொள்வோம். நாங்கள் எந்த விதிகளையும் மீறவில்லை எங்கள் தரப்பு விளக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளோம். அதற்கான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இன்றும் ஓரிரு நாட்களில் எங்களின் நிர்வாக குழு கூட்டத்தை நடத்துவோம்.” என்று கூறினார்