இந்தியா தொழிநுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. உள்நாட்டிலியே பல தொழிநுட்ப திட்டங்கள் அரசால் உருவாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போது, 6G சேவையும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 5G பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், இந்தியாவில் 6G சேவையை அறிமுகம் செய்வது தொடர்பாக இந்திய அறிவியல் கழகத்துடன் (IISc) இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது நோக்கியா கம்பெனி.
‘பாரத் 6G விஷன்‘ என்ற பெயரில் ஆய்வு செய்யப்படும் இத்தொழில்நுட்பம் 2030ல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள 6G ஆராய்ச்சிக் கூடத்தில் இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டம் தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி செய்யப்பட்டுவருகிறது. இந்த திட்டத்தை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இதற்கான சோதனை ஓட்டத்தை தற்போது பிரதமர் துவக்கியுள்ளார். இதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இணைய சேவை மூலம் 1TBPS வரை வேகம் கிடைக்கும்.