மக்களிடையே தகவல் தொடர்புக்காக பல அப்ளிகேஷன்கள் இருந்தாலும் WHATSAPP செயலி மிகவும் பிரபலமானதாக இருந்து வருகிறது. குறுந்தகவல்களை எளிமையான முறையில் பாதுகாப்புடன் பகிர்ந்து கொள்ள WHATSAPP செயலி உருவாக்கப்பட்டது. இந்த WHATSAPP செயலியில் துவங்கப்பட்ட காலங்களில் இருந்து பல்வேறு புதிய அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. சிறிது காலத்திற்கு முன்பு whatsapp செயலியை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா குழுமம் பெரிய தொகை கொடுத்து வாங்கியது. வாங்கியது முதலே வாட்ஸ் அப் செயலியை பல மேம்பாட்டிற்கு உட்படுத்தி பல அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் whatsapp அதன் பாதுகாப்பு விதிமுறைகள் கருதி மாதா மாதம் சந்தேகத்திற்குரிய whatsapp கணக்குகளை தடை செய்யவும் அஞ்சுவது இல்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் 71 லட்சத்து 96 ஆயிரம் WHATSAPP கணக்குகளை மெட்டா நிறுவனம் தடை செய்துள்ளது. இவற்றில் 19 லட்சத்து 54,000 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த அறிவிப்பும் பெறாமல் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தொழில்நுட்ப சட்டத்திற்கும் whatsapp வழிகாட்டுதலுக்கு முற்பட்டு பயணர்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு பயணர்களின் கணக்குகள் முடக்கம் மற்றும் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளுக்கு தடை என வாட்ஸ் அப் செய்து வருகிறது. சமீபத்தில் சீக்ரெட் கோடு என்ற புதிய ஆப்ஷனையும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட சேட்களை மட்டும் பிங்கர் பிரிண்ட் பேஸ் லாக் அல்லது பாஸ்வோர்ட் மூலமாக லாக் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீக்ரெட் கோட் வசதி பயனர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனார்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
71 லட்சத்து 96 ஆயிரம் WHATSAPP கணக்குகள் முடக்கம்
ஒரே மாதத்தில் முடக்கப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சி

186
முந்தைய செய்தி