சர்வதேச அளவில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. அந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மனித மூளை போன்று செயல்படும் ஒரு செயற்கை மூளை அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் மனித மூளை போலவே செயல்பட முடியும் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மனித நினைவுகளை புரிந்து கொள்ள முடியாது என்றாலும் மனித மூளைக்கு நரம்புகள் வழியே கடத்தப்படும் தகவல்கள் சேகரித்து அதற்கு ஏற்றவாறு செயல்பட முடியும் என தெரிவித்துள்ளனர். செயற்கையாக நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளை கணித்து மூளையின் சிக்னல்களை சரியாக கைப்பற்றி அதை நாம் நினைக்கும் வழியில் மாற்றிக் கொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் முதற்கட்டம் வெற்றியடைந்த நிலையில் இந்த செயற்கை மூலையில் திறன்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தல்களை அடையும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதன்படி இன்னும் சிறிது காலங்களில் மனித மூளை போல் செயல்படும் செயற்கை மூலையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என நம்ப முடிகிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் தேவையை கணக்கிட்டு கண்டுபிடிக்கப்படும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சிகள் நமக்கு வியப்பை ஏற்படுத்தினாலும். புதிய வடிவிலான ஆபத்துகளும் நமக்கு வருவதற்கு காரணமாக இருக்கின்றன என்பதை நாம் மறுக்கவும் முடியாது.