தகவல் தொடர்பு துறையில் இணையதள தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றி வருகிறது. பல நாடுகளும் இணைய தொழில்நுட்பத்தில் பல மேம்படுத்தல்களும் முயற்சிகளும் சோதனைகளும் செய்து வருகின்றன. இந்நிலையில் விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக சீனாவும் கடும் போட்டியிட்டு வருகிறது. இது சம்பந்தமாக பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி பரிசோதனையும் செய்து வருகிறது.
தற்போது இணையத் தொழில்நுட்பம் தொடர்பாக சோதனை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தி சீனா பரிசோதனையில் வெற்றி கண்டுள்ளது. செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்ப சோதனை வெற்றி பெற்றால் செயற்கைக்கோள் மூலம் தகவல் தொடர்புக்கான இணையதள வசதியை சீன அரசு வழங்க முடியும். தற்போது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே இந்த இணையதளம் மூலம் தகவல் தொடர்பு செய்யும் வசதியை பெற்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த 27ஆம் தேதி விண்வெளி சோதனைகளை மேற்கொண்ட சீனா தோல்வியை அடைந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் திசை மாறி விண்ணிலிருந்து பூமியை நோக்கி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது.