முதலமைச்சர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் பயணிப்பதற்கு அவரது வாகனத்தின் முன்பு கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும். இந்த வாகனங்களில் பிரத்தியேக பாதுகாப்பு கருவிகளும் பல தொழில்நுட்ப வசதிகளும் இருக்கும். இந்த கான்வாயில் குண்டு தொலைக்காத ஜாமர் கார், இணைய வழியிலான ஆபத்துகள் இருந்தால் துண்டிக்க தொழில்நுட்ப வசதி கொண்ட கார் மற்றும் உயரதிகாரிகள் முதலமைச்சரின் காருக்கு முன் செல்ல பிரத்யேக கார்கள் அட்வான்ஸ் பைலட், அட்வான்ஸ் டிசி உள்ளிட்ட கார்கள் இடம் பெறும். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்பு வாகனங்களை முழுமையாக மாற்றம் செய்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது தாயார் தயாளு அம்மா இல்லத்திற்கு வந்த ஸ்டாலின் ஆசி பெற்று சென்றார். அப்போது கருப்பு நிறத்திலான ஆறு புதிய இனோவா கார்கள் கான்வாய் வாகனங்களாக அணிவகுத்து வந்தன. இதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு புதியதாக ஆறு கருப்பு இனோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
காரின் மேற்பகுதியில் இருந்து அனைத்து நகர்வுகளையும் பதிவு செய்யும் அதிநவீன கேமரா காரின் பக்கவாட்டில் 10 பேர் வீதம் பாதுகாப்பு வீரர்கள் நிற்கும் வசதி