உலகளவில் வாட்ஸப் ஆப்’பிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் செய்திகளை அனுப்ப பயன்படுத்தப்படும் செயல் டெலிகிராம் ஆகும். நாளுக்கு நாள் டெலிகிராம் செயலியின் பயனர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகின்றது குறிப்பிடத்தக்கது. இதனால் பயனாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, டெலிகிராம் புதிய மாற்றங்களை செய்து வருகிறது.
சமீபத்தில், ‘People Nearby’ என்ற அம்சம் நீக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மிகக் குறைந்த அளவிலான பயனாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், பாட்ஸ் மற்றும் ஸ்காமர்கள் தொடர்பான பிரச்சினைகளும் இதற்குக் காரணமாக இருந்ததால் இந்த மாசம் நீக்கப்பட்டுள்ளதாக டெலிகிராம் நிறுவனர் பாவல் டுரோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மாற்றத்தின் மூலம் டெலிகிராம், பயனாளர்களின் பாதுகாப்பை முன்னிறுத்துகிறது. மேலும், வணிகர்களுக்கும் ஒரு புதிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது எனத் தெரிவித்தார்.
வந்தது புதிய அம்சம் – Businesses Nearby
‘People Nearby’ அம்சத்திற்கு மாற்றாக, ‘Businesses Nearby’ என்ற புதிய அம்சம் டெலிகிராமில் அறிமுகமாக உள்ளது. இந்த அம்சம் மூலம், பயனாளர்கள் தங்கள் அருகிலுள்ள உண்மையான மற்றும் சரிபார்க்கப்பட்ட வணிகங்களை எளிதாகக் கண்டறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், வணிகர்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விவரங்களை பகிர்ந்து, நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க இயலும். மேலும், இந்த புதிய அம்சத்தின் மூலமாக, போட்ஸ் மற்றும் ஸ்காமர்களின் இடையூறுகள் குறையும். பயனாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை எளிதாகக் கண்டறியலாம்.
உண்மையானத் தகவல்கள் மூலம் வணிகங்கள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம். டெலிகிராமின் இந்த புதிய மாற்றம், பயனாளர்கள் மற்றும் வணிகர்கள் இருவருக்கும் நன்மை பயக்கும் வகையில் அமைந்துள்ளது. இது டெலிகிராம் பயன்பாட்டை இன்னும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.