முகப்பு தொழில்நுட்பம் TN Alert செயலி – சிறப்பம்சங்கள் என்னென்ன?

TN Alert செயலி – சிறப்பம்சங்கள் என்னென்ன?

வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் புதிய செயலி

by Tindivanam News

TN Alert செயலி, பொதுமக்கள் எளிய முறையில் இயக்கக் கூடிய வானிலை செயலியாக உள்ளது. இச்செயலியின் மூலம் தம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம்.

இந்த செயலியில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. பேரிடர் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யவும், மாவட்ட நிருவாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்தச் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் குறித்த வானிலை முன்னெச்சரிக்கையினை அறிந்து கொண்டு, அதற்கேற்ப பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் TN- Alert செயலியை கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஐஓஎஸ் ஆஃப் ஸ்டோர் (IOS App Store)ல் இருந்து பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயனடையலாம்.

  அரசின் கஜானாவை நிரப்பும் மனித இயந்திரங்களா - ஓட்டுநர்கள்?

Download Application

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole