முகப்பு தொழில்நுட்பம் வாட்ஸ்அப் ஆப் அசுர வளர்ச்சி. இனிமேல் எல்லாமே AI’தான்

வாட்ஸ்அப் ஆப் அசுர வளர்ச்சி. இனிமேல் எல்லாமே AI’தான்

வாட்ஸ்அப் தலைமை அதிகாரி பேச்சு

by Tindivanam News

உலகளவில் மக்கள் பயன்படுத்தும் மொபைல் அப்ளிகேஷனலில் வாட்ஸ்அப் ஆப் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவிலும் பொதுமக்கள் செய்திகள் அனுப்ப பல ஆப்’கள் இருந்தாலும் வாட்ஸ்அப் ஆப்’யே முதன்மையானத் தேர்வாக கொண்டுள்ளனர்.

சமீபத்தில், வாட்ஸ்அப் நிறுவனத்தின் தயாரிப்பு தலைவர் அலைஸ் நியூட்டன் ரெக்ஸ், பயனாளிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் வாட்ஸ்அப்பின் ஏ.ஐ., (AI) அம்சம், முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் ஓராண்டிற்கு முன்பு வாட்ஸ்அப் சேனலை அறிமுகம் செய்து வைத்தது.இந்நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, வாட்ஸ்அப்பின் பயன்பாடு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த நிறுவனத்தின் தயாரிப்பு தலைவர் அலைஸ் நியூட்டன் ரெக்ஸ் கூறியதாவது:

“மக்கள் குறுஞ்செய்தியாகவும், வீடியோ வடிவிலும் தங்கள் சொல்ல விரும்பும் தகவல்களை பிறருக்கு கொண்டு சேர்க்க வாட்ஸ் அப் சேனல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொய்யான தகவல்களை பரப்புவதை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

வாட்ஸ் சேனல்கள் மூலம், மக்களுக்கு தேவையான விஷயங்கள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்பில் இருக்க முடியும். உடனே ஆக்ஷன் வாட்ஸ்அப்பை போல என்கிரிப்ட் சேவை மாதிரி இல்லாமல், சர்ச்சை தகவலையோ, பொய் செய்தியை பரப்பும் சேனல்கள் மீது புகார் அளித்தால், அதனை உடனே நீக்கம் செய்ய முடியும்.

  நீங்க ஜி-மெயில் (GMAIL) பயன்படுத்திறீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான்

தங்களின் சாட்களில் புரியாத சில விஷயங்களுக்கு, பயனாளிகள் மெட்டா ஏ.ஐ.,யை பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியும். மெட்டா AI , இனி வரும் காலங்களில் பயனாளிகள் மற்றும் தொழில்செய்வோரின் வளர்ச்சிக்கு ஏ.ஐ., முக்கிய பங்காற்றும். ஏ.ஐ., என்றால் என்ன என்று கூட தெரியாதவர்களுக்கு, வாட்ஸ்அப்பில் உள்ள ஏ.ஐ., வசதியின் மூலம், அதுபற்றி புரிதல் ஏற்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் இருக்கும் நிறுவனங்களின் வாட்ஸ் அப் சேனல்கள் அதீத வளர்ச்சி பெறுகின்றன. அதேவேளையில், சிறிய சேனல்களும் பிரபலம் ஆவதற்கான பரிந்துரைகளை செய்து வருகிறோம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் உள்ள பரிந்துரை அம்சங்களை, வாட்ஸ்அப்பிலும் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

சேனல்கள் மூலம் வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வணிகத்தை விரிவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அதேபோல, பயனாளிகளின் மெசேஜ்களில் இருக்கும் தகவல்களை பாதுகாப்பதே முக்கிய நோக்கம்.

மேலும், இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து, ‘முன் தேதியிடும் மெசேஜ்’ ( Scheduled Message) அனுப்பும் வசதிகளை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் வருகின்றன, எனக் கூறினார்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole