விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உலக பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 2010’ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு புதியதாக தங்கத்தேர் வடிவமைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அந்தத் தங்கத்தேர் பழுதானது. தங்கத்தேரைப் புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நிறைவுற்றது. புதுப்பிக்கப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர் பாபு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு தங்கத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு இவ்வாறு கூறினார், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மொத்தமாக 68 தங்கத்தேர்கள் இருக்கின்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பதினாறு கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தங்கத் தேர்கள் உருவாக்கி கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம், சமயபுரம் போன்ற கோவில்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பழுதாகி இருந்த தங்கத்தேர்கள் புதுப்பிக்கப்பட்டு தேர் பவனி துவங்கப்பட்டது. திருத்தணி, வடபழனி, திருச்செந்தூர் போன்ற கோவில்களிலும் தங்கத் தேரோட்டம் நடந்துள்ளது. இதுவரை தமிழகம் முழுதும் 1153 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டு 558 கோடி ரூபாய் மதிப்பிலான 5917 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் தங்கத்தேர்
புதுப்பிக்கப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது

302
முந்தைய செய்தி