விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், செஞ்சி, வானூர், மரக்காணம் என பெரும்பாலான இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாழங்காடுகுப்பம், அழகன்குப்பம், அனுமந்தைகுப்பம், கூனிமேடுகுப்பம் மற்றும் நடுக்குப்பம் உட்பட 19 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
அதிகபட்சமாக மரக்காணத்தில் 8 சென்டிமீட்டர் மழை

290
முந்தைய செய்தி