மரக்காணம் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மரக்கணம் சுற்றியுள்ள நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மரக்காணம் அருகில் உள்ள ஓங்கூர் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் காணிமேடு – மண்டகப்பட்டு சாலையில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால், இதனை சுற்றியுள்ள 5 கிராம மக்கள் அருகில் உள்ள திண்டிவனம், பாண்டிச்சேரி மற்றும் பல ஊர்களுக்கு செல்ல இயலவில்லை. கடந்த சில தினங்களாகவே இங்கே மழை பெய்து வருவதால் போக்குவரத்து தடை ஏற்பட்டு இருந்தது.
தற்போது தரைப்பாலமும் நீரில் மூழ்கியதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வருடாவருடம் மழை பெய்யும் போதெல்லாம் இந்த தலைப்பாலம் மூழ்குவதால் வெள்ளநீர் வடியும் வரை மக்களின் போக்குவரத்து துண்டிப்பு செய்வதால் பெரும் அவதி அடைகின்றனர். இதனால் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள வெள்ளநீரை கடக்க பாலம் கட்டித் தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.