முகப்பு மரக்காணம் அரசு பேருந்து பிரேக் டவுன், பள்ளி செல்லும் மாணவர்கள் அவதி

அரசு பேருந்து பிரேக் டவுன், பள்ளி செல்லும் மாணவர்கள் அவதி

கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை

by Tindivanam News
government bus break down in markkanam and students suffered

மரக்காணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளிகளில் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர், இவ்வாறு பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பெரும்பாலும் அரசு பேருந்தையே நம்பி உள்ளனர் அதிலும் குறிப்பாக ஆலத்தூர், குரும்புரம், கந்தாடு உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மாணவ மாணவிகள் பெரும்பாலும் அரசு பேருந்து நிலையையே பயணம் செய்து பள்ளிக்குச் செல்கின்றனர் இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிகள் முடித்து மரக்காணத்திலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள் வழக்கமாக சென்று கொண்டிருந்தபோது மரக்காணம் அடுத்த திரௌபதி அம்மன் கோவில் அருகே சென்ற அரசு பேருந்து திடீரென பிரேக் டவுன் ஆகி நின்றது இதன் காரணமாக மாணவ மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர், மேலும் பள்ளி விடும் சமயங்களில் ஒரு சில அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பேருந்து முழுவதும் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது, அவ்வாறு கூட்டம் நிரம்பி காணப்படும் போது பேருந்துகள் பழுது ஏற்படுவதால் மாணவ மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர், எனவே கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  அறுவடைக்கு தயாரான தர்பூசணிகள் சேதம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole