முகப்பு புதுச்சேரி புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது

by Tindivanam News
special voters name addition camp at puducherry

புதுச்சேரி முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

நெட்டப்பாக்கம், பாகூர், ஏம்பலம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமை புதுச்சேரி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான வல்லவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக படிவங்கள் பெறும் பணிகள் நடைபெற்று வருகிறதா, 18 வயதான புதிய வாக்காளர்கள் எத்தனை படிவங்கள் வந்துள்ளது என உள்ளிட்ட விவரங்களில் வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது துணை கலெக்டர் வினைகுமார், வாக்காளர் பதிவு அதிகாரி சந்திரகுமாரன் ஆகியோர் உடன் இருந்தனர். இதைப்போல தேர்தல் பார்வையாளர் மற்றும் செயலர் முத்தம்மா, தாசில்தார் கோபால கிருஷ்ணன், துணை தாசில்தார் விமலன் ஆகியோர் தனிக்குழுவாக ஆய்வு செய்தனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  புதுச்சேரி ஜிப்மரில், பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole