வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், புதுச்சேரி கடற் பகுதியில் வழக்கத்தை விடவும் கடல் அலைகள் சீற்றமாக காணப்படுகின்றது. இதனால் புதுச்சேரிக்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் கடலில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். தடையை மீறி குளிக்க முயன்ற ஒரு சிலரை போலீசார் எச்சரித்து வெளியேற்றினர். மேலும், பொதுமக்கள் கடற்கரை சாலைக்கு செல்லாதபடி சாலை சந்திப்புகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு நடைமுறைகள் செய்தனர்.
புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தபடி இருந்தனர்.