சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த சரக்கு பெட்டகம் ஒன்றை சோதனை செய்ததில் போதைப் பொருள் சிக்கியது இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதே போன்று நான்கு முறை ஆஸ்திரேலியாவிற்கு போதைப் பொருட்களை கடத்தியது கண்டுபிடிப்பு. இந்த போதைப்பொருள் சென்னைக்கு எங்கிருந்து வந்தது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனையின் போது குற்றவாளிகள் பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் மற்றும் 3.9 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல்.