கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையைக் கேட்டு மக்கள் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இது நேற்று சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ. 200 குறைந்து ரூ. 48720’க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் ரூ.360 உயர்ந்து தங்கம் விற்பனையாகிறது.
நேற்றைய விலையைவிட இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 45 அதிகரித்து, ஓரு சவரன் தங்கம் ரூ. 6135 என சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மட்டுமில்லாமல், வெள்ளியும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ. 80.30’க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 80300 என சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தங்கத்தின் விலையேற்றம் உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பே காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் தங்கம் விலை இன்று சில காலம் உயர்ந்துகொண்டேதான் இருக்கும் எனவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை பற்ற நீங்க என நினைக்கிறீங்க, கமெண்ட்ல சொல்லுங்க !