முகப்பு தமிழ்நாடு திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள்

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

by Tindivanam News
2700 special buses to tiruvannamalai for karthigai deepam

தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் என்றும்கிரிவலப் பாதையில் இலவச சிற்றுந்து வசதி ஏற்படுத்தப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருநாள் வரும்26-ம் தேதி, மற்றும் 27-ம் தேதி பவுர்ணமிகிரிவலத்தை முன்னிட்டு 25, 26, 27-ம்தேதிகளில் முதல்வர் உத்தரவுப்படி அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6,947 நடைகள் இயக்கப்பட உள்ளது.

மேலும், திருவண்ணாமலை நகரில்போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாககட்டணமின்றி 40 சிற்றுந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையங்களைப் பொறுத்தவரை, வேலூர் ரோடு – அண்ணா ஆர்ச்சில் இருந்துபோளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு,செய்யாறு மார்க்க பேருந்துகளும், அவலூர்பேட்டை சாலையில் இருந்து(எஸ்ஆர்டிஜிஎஸ் பள்ளி எதிரில்) சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம்செல்லும் பேருந்துகளும், திண்டிவனம் சாலையில் (ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்) இருந்து செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், அடையாறு, கோயம்பேடு செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும், வேட்டவலம் சாலையில் (சர்வேயர் நகர்) இருந்து வேட்டவலம், விழுப்புரம் பேருந்துகளும், திருக்கோயிலூர் சாலையில் (ஆண்கள் மேல்நிலைப்பள்ளி) இருந்து திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி வழியாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

  ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி - கவர்ச்சி விளம்பரங்களால் ஏமாற வேண்டாம்

இதேபோல், மணலூர்பேட்டை சாலையில் (செந்தமிழ் நகர்) இருந்து மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை பேருந்துகள், செங்கம் சாலையில் (அத்தியந்தல் மற்றும் சுபிக்க்ஷா கார்டன்) இருந்துசெங்கம், தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூரு, ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர் பேருந்துகள், காஞ்சி சாலையில் (டான் பாஸ்கோ பள்ளி) இருந்து காஞ்சி, மேல்சோழங்குப்பம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

பேருந்து முன்பதிவு வசதி:
பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கவும், பக்தர்களுக்கு எவ்விதமான அசவுகரியமும் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

தகவல் : ஹிந்து தமிழ்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole