வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வரும் 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.