வரத்து குறைவு காரணமாக சென்னை மாநகரில் தேங்காய் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 30க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய் கோயம்பேட்டிற்கு வந்து கொண்டிருந்த நிலையில் இப்போது 10க்கும் குறைவான லாரிகளே வருகிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறும் போது “கடந்த வருடம் இந்த நேரத்தில் மொத்த விலையில் கிலோ 24 ரூபாய்க்கு விற்ற தேங்காய் இன்று கிலோ 55 முதல் 60 ரூபாய் வரை விற்று வருகிறது. இது மேலும் உயரும்” என்றும் தெரிவிக்கிறார்கள். இதே போல் இளநீர் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள தோப்புகளில் இளநீர் 40 முதல் 50 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேங்காய் வியாபாரிகள் கூறும் போது “பொள்ளாச்சி பகுதிகளில் தேங்காய் கிடைக்காத காரணத்தால் பேராவூரணி மற்றும் மைசூர் பகுதிகளில் இருந்து கொண்டு வருகிறோம். அடுத்த மாதம் மேலும் தட்டுபாடு ஏற்படும் எனவே அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தேங்காய் தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.