சமீபத்தில் செஞ்சி பேரூராட்சி கூட்டம் தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் தலைமையில் செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வைக்க நடைபெற்றது. இந்த பேரூராட்சி கூட்டத்தில் செஞ்சியில் கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடந்த செலவினங்களுக்கான ஒப்புதல் வழங்கும் தீர்மானம் உட்பட 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் கூறியதாவது, “மக்களுடன் முதல்வர் திட்டத்திற்காக தமிழகத்தில் ஏழு பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நம்முடைய செஞ்சி பேரூராட்சியும் உள்ளடக்கம். இதற்காக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திட்டத்தின் படி மக்களின் குறைகளை கேட்டறிந்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும். பொதுமக்களின் கோரிக்கை முதல்வரின் நேரடி பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாக தீர்வு காணப்படும். இந்த திட்டத்தின் துவக்க விழாவில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அவர்கள் முன்னிலை வகிக்க, ஒன்பது துறைகளின் உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.”