கடந்த சிலநாட்களாகவே தங்கத்தின் விலை உச்சத்திற்கு மேல் உச்சம் பெற்று, பல சாதனைகளை செய்து விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் சவரனுக்கு மேலும் ரூ. 200 உயர்ந்து, தங்கப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எப்போது தான் இந்த தங்கம் விலை குறையும் ? – வாங்க பார்ப்போம் !
நேற்று (புதன்கிழமை) சின்ன விலை சரிவுடன் தொடங்கி சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. இதனால் நகை வாங்கிவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில், சென்னையில் நேற்று 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 6,110 ரூபாய்க்கும், சவரன் 48,880 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆனால், இன்று (வியாழன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்து 6,135 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 49,080 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதுபோல, 24 காரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,605’ம், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ரூ.52,840’கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை மட்டுமில்லாமல், வெள்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 50 காசுகள் அதிகரித்து 80 ரூபாய்க்கும், கிலோவிற்கு 500 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்று தங்கம் விலை நிலவரம் (சென்னை, தமிழ்நாடு)
- 22 காரட் தங்கம் 1 கிராம் – ரூ. 6,135 (மாற்றம்: ரூ.25 உயர்வு)
- 22 காரட் தங்கம் 1 சவரன் – ரூ.49,080 (மாற்றம்: ரூ.200 உயர்வு)
- 24 காரட் தங்கம் 1 கிராம் – ரூ.6,605 (மாற்றம்: ரூ.25 உயர்வு)
- 24 காரட் தங்கம் 1 சவரன் – ரூ.52,840 (மாற்றம்: ரூ.200 உயர்வு)
தங்கம் விலை எப்போது குறையும் ?
உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. அதற்கான காரணிகளாக, சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, உற்பத்தி குறைவு, நிறுவனங்களின் பங்கு சந்தை வீழ்ச்சி, ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-காசா போர் விளைவுகள் கூறப்படுகின்றன. இதனாலேயே தங்கத்தின் விலை தொடர்ந்து உயந்து வருவதாகவும், சீக்கிரத்தில் இதற்கெல்லாம் தீர்வு கிடைத்தால் தங்கத்தின் விலை குறையும் என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீங்க சொல்லுங்க தங்கத்தின், விலை குறையுமா இல்லையா ?