ஒரே நாளில் ரூ. 800 வரை உயர்ந்த தங்கத்தின் விலை. ஒரு சவரன் அபரணத்தங்கத்தின் விலை ரூ.47,520-க்கு விற்கப்படுகிறது.
தங்கம்’னா யாருக்குத்தான் வேணாம்னு செல்லுவாங்க. குறிப்பாக பெண்களுக்கு சொல்லவா வேணும். ஆனால் இப்பொது பெண்களே தங்கத்தின் விலையைக் கேட்டு தள்ளி நிற்கிறார்கள். ஆம், சமீபகாலமாக தங்கத்தின் விலை உயர்ந்துகொன்டே வந்தது. தற்போது தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் ஆபரனத்தங்கத்தின் விலை ரூ. 47000’ஐ கடந்து விற்பனை ஆகிறது.
தென்னிந்தியாவில் தங்கத்தை அதிகம் விரும்பும் மாநிலமாக தமிழ் நாடு உள்ளது. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் நடக்கும் தங்க வர்த்தகம் மிகவும் அதிகம். நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் வர்த்தகமாகிறது.
இந்நிலையில், நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கத்தில் விலை மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.5,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.77-க்கு விற்பனையாகிறது.