மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா திமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக் கூட்டத்தில் தமிழ் திரை உலகில் கலைஞரின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக கலைஞருக்கு பிரம்மாண்டமான நூற்றாண்டு விழா எடுக்க முடிவு செய்யப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த பிரம்மாண்ட விழாவில் கலைஞர் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய தொண்டு பற்றி போற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த “கலைஞர் 100” விழாவிற்கு தமிழ் உச்ச நட்சத்திரங்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன.
மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், மக்கள் நீதி மையக் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கும் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் இந்த விழாவிற்கு கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.