முகப்பு தமிழ்நாடு சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க புதிய திட்டம்

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க புதிய திட்டம்

பலன் அளிக்குமா ? மக்கள் எதிர்பார்ப்பு

by Tindivanam News

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அவையாவன,

▪️ சென்னையில் நீர்வளத்துறை வசமிருந்த வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

▪️ 6.5 கி.மீ நீளமுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் இருக்கும் குறுகிய பாலங்களால் 1700 கன அடி நீர் செல்ல வேண்டிய இடத்தில் 800 கன அடி மட்டுமே நீர் செல்வதால், 12 குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்ட நடவடிக்கை

▪️ வடபழனி 100 அடி சாலையில் ஒவ்வொரு முறையும் மழையால் தண்ணீர் தேங்குவதற்கு, கால்வாயில் அதிக தண்ணீர் செல்ல முடியாததே காரணமாக இருப்பதால் குறுகிய பாலங்களை இடித்து, அவை உயர்த்திக் கட்டப்பட உள்ளன

▪️ வரும் 2025 பிப்ரவரி மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும். இதனால் சுமார் 25 லட்சம் மக்கள், மழை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுக்காக்கப்படுவார்கள் என மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) தகவல்

  எச்சரிக்கை ! அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேரவேண்டாம்

▪️ இதேபோல, வேளச்சேரியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கு தீர்வாக 2.78 கி.மீ தூரத்திற்கு வீராங்கல் ஓடையின் பக்கவாட்டு சுவரை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஓடையில் தற்போது செல்லும் தண்ணீரை விட 25% தண்ணீர் கூடுதலாக செல்ல வழிவகை செய்யப்படும்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole